எனக்கு
தனிமை பிடிக்கவில்லை-இருந்தும்
மரத்தூன்களைஎண்ணி ஆயுல் கைதியானேன்
உணர்ச்சிகளை
உலைக்களத்தில் வேகவைத்து
விழிகள் ஏனோ நாகரிகபொம்மைகளையே
மேய்கிறது
சமுகத்தின் சட்டத்துக்கும்
சொந்தத்தின் மரபுக்கும்
குடும்பத்தின் பழக்கத்துக்கும் சிறைவாசம்
செய்கின்றேன்
யாப்பில் ஏனோ
பேச்சுரிமை ஆனாலும் பேசாமடந்தையாகவே
மெளனங்களை தொண்டக்குழிவரை
சுமக்கின்றேன்
எதிர்காலத்தை
சிந்திக்கவே முடியாத ஏழைபிறப்புக்கு
தெரிந்ததெல்லாம் வாசனையில்லாத
குடிசை அறைதான்
அடுப்பங்கறை
தொட்டு படுக்கையறை மட்டும்தொடரும்
நகர்வுகளில்
முற்றத்து மலர்களை கண்டது
சில நாட்களேதான்
என் சோகங்களை
சொல்வதற்கு ஒருவருமில்லை
தென்றல் காற்றையாவது
திசைதிருப்புங்கள்
சிறைவாசம் அனுபவித்து
சீதனத்துக்கு சில்லறையில்லாமலே
மரணித்துவிடுகின்றேன் -இன்னொரு
உலகத்திலாவது சுதந்திரம் கிடைக்கும்
என்ற நம்பிக்கையில்.....

மரத்தூன்களைஎண்ணி ஆயுல் கைதியானேன்
உணர்ச்சிகளை
உலைக்களத்தில் வேகவைத்து
விழிகள் ஏனோ நாகரிகபொம்மைகளையே
மேய்கிறது
சமுகத்தின் சட்டத்துக்கும்
சொந்தத்தின் மரபுக்கும்
குடும்பத்தின் பழக்கத்துக்கும் சிறைவாசம்
செய்கின்றேன்
யாப்பில் ஏனோ
பேச்சுரிமை ஆனாலும் பேசாமடந்தையாகவே
மெளனங்களை தொண்டக்குழிவரை
சுமக்கின்றேன்
எதிர்காலத்தை
சிந்திக்கவே முடியாத ஏழைபிறப்புக்கு
தெரிந்ததெல்லாம் வாசனையில்லாத
குடிசை அறைதான்
அடுப்பங்கறை
தொட்டு படுக்கையறை மட்டும்தொடரும்
நகர்வுகளில்
முற்றத்து மலர்களை கண்டது
சில நாட்களேதான்
என் சோகங்களை
சொல்வதற்கு ஒருவருமில்லை
தென்றல் காற்றையாவது
திசைதிருப்புங்கள்
சிறைவாசம் அனுபவித்து
சீதனத்துக்கு சில்லறையில்லாமலே
மரணித்துவிடுகின்றேன் -இன்னொரு
உலகத்திலாவது சுதந்திரம் கிடைக்கும்
என்ற நம்பிக்கையில்.....
நல்லா இருக்கு..
பதிலளிநீக்கு