நெருப்பில்
வேகின்றது வறுமைஉணர்வுகள்
கூடவே வடிகட்டிஎடுக்கப்படுகிறது
வம்சச்சாம்பாரில் ஏழையின் கண்ணீர்
பணம்
மனத்தை மணமுடித்து
சவக்குழிகளுக்கு அலங்காரம்
செய்கிறது
ஒப்பாரி ராகத்தில்
சந்தோசத்தை காணத்துடித்து
தமிழனின் தலைவிதி
மாறிப்போனது
முதலாளித்துவம்
பிரபஞ்சத்தை விலைக்குபேசி
அடக்குமுறையை திணிக்க முயலுகிறது
பொம்மை
கலாசாரத்தில் பெண்ணியம் அடிபணிந்து
விற்பனையாகிறது
இருந்தும்
தொடரும் தவிப்புக்களில்
அழுது புலம்புகிறது
மனித மனங்கள்
வேகின்றது வறுமைஉணர்வுகள்
கூடவே வடிகட்டிஎடுக்கப்படுகிறது

பணம்
மனத்தை மணமுடித்து
சவக்குழிகளுக்கு அலங்காரம்
செய்கிறது
ஒப்பாரி ராகத்தில்
சந்தோசத்தை காணத்துடித்து
தமிழனின் தலைவிதி
மாறிப்போனது
முதலாளித்துவம்
பிரபஞ்சத்தை விலைக்குபேசி
அடக்குமுறையை திணிக்க முயலுகிறது
பொம்மை
கலாசாரத்தில் பெண்ணியம் அடிபணிந்து
விற்பனையாகிறது
இருந்தும்
தொடரும் தவிப்புக்களில்
அழுது புலம்புகிறது
மனித மனங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக