ஜே.எஸ்.ராஜ் கவிதைகள்
மனதில் நிஜமாய் அலங்கரிக்கும் நிஜங்கள்...
புதன், 20 ஏப்ரல், 2011
நட்புக்காக
கிடைக்காத விடிவு
வெந்துபோகும்
வாழ்க்கையில் பணம்
வேசம் போட்டு
நாடகமாடுகிறது........
ஈரமில்லாத
மனங்களில் ஜனநாயகம்
தோற்கடிக்கப்பட்டு
நெஞ்சுவர்களில் மட்டும்
சுலோகமாயிருக்கிறது...
நிம்மதியை
தொலைத்த
அகதிப்பிஞ்சுகளின் கல்வியும்
கொடுக்கமுடியாத
கடனாகிப்போனது......
தாயையே
முதியோர் இல்லத்துக்கு
அனுப்பும் பிரபஞ்சத்தில்
அன்பும் அநாதையாகிப்போனது...
சரித்திரங்களை
படைத்திடும் மனிதர் நடுவே
ஏனோ சாதி மட்டும்
தூரநிற்கிறது...
கடவுளே
மரணத்தை விட
கொடுமையானது
மனித மனங்கள்,,,
வாழ்க்கையில் பணம்
வேசம் போட்டு
நாடகமாடுகிறது........
ஈரமில்லாத
மனங்களில் ஜனநாயகம்
தோற்கடிக்கப்பட்டு
நெஞ்சுவர்களில் மட்டும்
சுலோகமாயிருக்கிறது...
நிம்மதியை
தொலைத்த
அகதிப்பிஞ்சுகளின் கல்வியும்
கொடுக்கமுடியாத
கடனாகிப்போனது......
தாயையே
முதியோர் இல்லத்துக்கு
அனுப்பும் பிரபஞ்சத்தில்
அன்பும் அநாதையாகிப்போனது...
சரித்திரங்களை
படைத்திடும் மனிதர் நடுவே
ஏனோ சாதி மட்டும்
தூரநிற்கிறது...
கடவுளே
மரணத்தை விட
கொடுமையானது
மனித மனங்கள்,,,
தொலைந்தநிம்மதி
நிஜங்கள்
பறிக்கப்பட்டு
பொம்மைகளாய்
நடமாடுகிறது-மனிதம்
பொருளாதாரம்
முதலாளித்துவம் பேசி
ஏழைகளுக்கு
வழங்குகிறது-மரணப்பரிசு
காலம்
பிரபஞ்சத்தை கடத்திச்செல்ல
நிர்வாண அசிங்கமாகிறது
கலாசாரம்
நிம்மதி
தொலைந்த உறவில்
விம்மி அழுது போகிறது
பெண்ணியம்
யுத்தம்
முடிந்தும் சுதந்திரம்
இல்லாத மனிதர்களாய்
இங்கு-தமிழினம்
பறிக்கப்பட்டு
பொம்மைகளாய்
நடமாடுகிறது-மனிதம்பொருளாதாரம்
முதலாளித்துவம் பேசி
ஏழைகளுக்கு
வழங்குகிறது-மரணப்பரிசு
காலம்
பிரபஞ்சத்தை கடத்திச்செல்ல
நிர்வாண அசிங்கமாகிறது
கலாசாரம்
நிம்மதி
தொலைந்த உறவில்
விம்மி அழுது போகிறது
பெண்ணியம்
யுத்தம்
முடிந்தும் சுதந்திரம்
இல்லாத மனிதர்களாய்
இங்கு-தமிழினம்
ஏக்கங்கள்
என்றைக்கு
எப்போது
எதிர்வு கூறமுடியாத ஜனநாயகவாதிகள்
கண்ணீரை சொந்தமாக்கி
கல்லறையில் சமாதியானவர்கள்
கணக்கிட்டால் பல லட்சம்...
சொத்துக்களை இழந்து
சொந்தங்களைதொலைத்து
சோற்றுக்கு வழியேது-சொல்லப்போனால்
சோர்ந்துபோனது எம் உள்ளமும்தான்
இருப்பதற்கு வீடேது
இளைப்பாற இருக்கையேது
மரநிழலில் வாழ்கிறோம்
மரண அச்சுருத்தலும்
மரணஓலங்களும்
மண்ணில்நிரந்தர சோகங்கள்தான்
விருவிருப்பாய் வீசப்படும் செல்வீச்சுக்களும்
சவக்குழியே ஞாபகப்படுத்துகிறது
என்றைக்கு
எப்போது
எதிர்வு கூறமுடியாத இன்றைய நிலை........
எப்போது
எதிர்வு கூறமுடியாத ஜனநாயகவாதிகள்
கண்ணீரை சொந்தமாக்கி
கல்லறையில் சமாதியானவர்கள்
கணக்கிட்டால் பல லட்சம்...
சொத்துக்களை இழந்து
சொந்தங்களைதொலைத்து
சோற்றுக்கு வழியேது-சொல்லப்போனால்
சோர்ந்துபோனது எம் உள்ளமும்தான்
இருப்பதற்கு வீடேது
இளைப்பாற இருக்கையேது
மரநிழலில் வாழ்கிறோம்
மரண அச்சுருத்தலும்
மரணஓலங்களும்
மண்ணில்நிரந்தர சோகங்கள்தான்
விருவிருப்பாய் வீசப்படும் செல்வீச்சுக்களும்
சவக்குழியே ஞாபகப்படுத்துகிறது
என்றைக்கு
எப்போது
எதிர்வு கூறமுடியாத இன்றைய நிலை........
நிறைவேறாத ஆசை
மாறிக்கொள்ளமுடியாமல்போனது
வறுமையின் மறுபதிப்புக்கள்
மனதில்
மறைந்துபோகாமல்
மெளன அஞ்சலி பிரார்த்தனை
இடம்பெறுகிறது
சமாதானத்தை பெற்றெடுப்பதற்கென்று
சாவுடன்
இங்கு ஆவிகள்
உரையாடல் செய்கிறது
ஆர்ப்பாட்டம் புரிய இங்கு
ஆட்கள் இல்லையென்று
இடப்பெயர்வுகள்
அகதிவருகைநிவாரணவரிசை மிளவும்
எம் வீதிகளில் தொகுப்பிக்கப்படுகிறது
எமக்கு
சமாதானகாற்றை அரவணைக்க
முடியவில்லையே மனிதனாக பிறந்தும்....
செவ்வாய், 19 ஏப்ரல், 2011
இறுதித்தீர்ப்பு
படிக்கின்ற வயதை
யுத்தமதில் தொலைத்து
படிக்காமலே பட்டம் எடுத்தேன்
அகதி என்று
பாசத்தைஅனுபவிக்கையில்
பந்தங்களை இழந்து
தனிமையில் சோர்வு பட்டேன்
அநாதை என்று
இளமையை ரசிக்கையில்
இனந்தெரியாமல் பிடிபட்டு
இரக்கமில்லாமல்
அவஸ்தைப்படுகின்றேன்
குற்றவாளி என்று
கனவுகளை நினைக்கையில்
கண்ணீரைப்பெற்று
குருதிபடிந்த நினைவுகளை சுமக்கின்றேன்
வேற்றினத்தான் என்று
இன்னொரு நரகத்தை
இனியும் அனுபவிக்கமுடியாது
கடவுளே-தீர்ப்பை
மாற்றி எழுதும்....தமிழனுக்கென்று
யுத்தமதில் தொலைத்து
படிக்காமலே பட்டம் எடுத்தேன்
அகதி என்று
பாசத்தைஅனுபவிக்கையில்
பந்தங்களை இழந்து
தனிமையில் சோர்வு பட்டேன்
அநாதை என்று
இளமையை ரசிக்கையில்
இனந்தெரியாமல் பிடிபட்டு
இரக்கமில்லாமல்
அவஸ்தைப்படுகின்றேன்
குற்றவாளி என்று
கனவுகளை நினைக்கையில்
கண்ணீரைப்பெற்று
குருதிபடிந்த நினைவுகளை சுமக்கின்றேன்
வேற்றினத்தான் என்று
இன்னொரு நரகத்தை
இனியும் அனுபவிக்கமுடியாது
கடவுளே-தீர்ப்பை
மாற்றி எழுதும்....தமிழனுக்கென்று
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






