பாதுகாவலன் 23/11/2008 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாதுகாவலன் 23/11/2008 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

இறுதித்தீர்ப்பு

படிக்கின்ற வயதை
யுத்தமதில் தொலைத்து
படிக்காமலே பட்டம் எடுத்தேன்
அகதி என்று


பாசத்தைஅனுபவிக்கையில்
பந்தங்களை இழந்து
தனிமையில் சோர்வு பட்டேன்
அநாதை என்று


இளமையை ரசிக்கையில்
இனந்தெரியாமல் பிடிபட்டு
இரக்கமில்லாமல் 
அவஸ்தைப்படுகின்றேன்
குற்றவாளி என்று


கனவுகளை நினைக்கையில்
கண்ணீரைப்பெற்று
குருதிபடிந்த நினைவுகளை சுமக்கின்றேன்
வேற்றினத்தான் என்று


இன்னொரு நரகத்தை
இனியும் அனுபவிக்கமுடியாது
கடவுளே-தீர்ப்பை
மாற்றி எழுதும்....தமிழனுக்கென்று